நீலகிரியின் முதல் ஆட்சியர் ஜான் சலீவனின் 231-வது பிறந்தநாள் விழா உற்சாகக் கொண்டாட்டம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியரும், நவீன நீலகிரியை உருவாக்கியவருமான ஜான் சலீவனின் 231-வது பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தின் முதல் ஆட்சியரும், நவீன நீலகிரியை உருவாக்கியவருமான ஜான் சலீவனின் 231-வது பிறந்தநாள் விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. 

200 ஆண்டுகளுக்கு முன் கோவை மாவட்டத்தின் ஆட்சியராக இருந்த ஜான் சலீவன் முதன் முதலாக கோவை மாவட்டத்திலிருந்து சிறுமுகை வனப்பகுதியின் வழியாக கோத்தகிரி பகுதிக்கு சென்றார். பின் அங்குள்ள மக்களை சந்தித்து இவர்கள் மலை மீது வாழ்வதை அரசுக்குத் தெரிவித்தார். 



அதன் பின், நீலகிரி மாவட்டம் கோவை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டு, இவ்விரு மாவட்டத்திற்கும் ஆட்சியராக ஜான் சலீவன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், நீலகிரி மாவட்டத்தில் ஆட்சியராகப் பொறுப்பேற்ற பின், நீலகிரி மாவட்ட விவசாயிகளின் பல்வேறு வளர்ச்சிகளுக்கு காரணமாக இருந்துள்ளார். 



இந்த நிலையில் ஜான் சலீவனின் 231-வது பிறந்தநாள் விழா கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு கிராமத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் கோட்டாட்சியர் ரஞ்சித் சிங் ஆகியோர் கலந்து கொண்டு, அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...