தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து டெல்லியில் பிரதமர் மோடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் பொன்னாடை அணிவித்து, மலர் கொத்து வழங்கினார்.

அப்போது, தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நிதின் கட்காரியை சந்தித்தார்.

அப்போது, தமிழகத்திற்கான நெடுஞ்சாலை திட்டங்கள் குறித்து கோரிக்கை மனுவை வழங்கினார். பின்னர், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்த போது, அவருக்கு பொன்னாடை அணிவித்து மலர்க்கொத்து வழங்கினார்.

அப்போது, தமிழகத்திற்கான நதிநீர் திட்டங்கள், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேசினார்.

இந்த சந்திப்பின் போது, மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உள்ளனர்.