ரூ. 50 லட்சம் மதிப்பிலான புனரமைக்கப்பட்ட ஜல்லிமேடு ஆரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

கோவை : கோவையில் எல்&டி வால்வ்ஸ் நிறுவனம் சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டமைப்பு வசதிகள் புனரமைக்கப்பட்ட ஜல்லிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கோவை : கோவையில் எல்&டி வால்வ்ஸ் நிறுவனம் சார்பில் ரூ. 50 லட்சம் மதிப்பில் கட்டமைப்பு வசதிகள் புனரமைக்கப்பட்ட ஜல்லிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சி, ஜல்லிமேடு ஆரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை எல்&டி வால்வ்ஸ் 2018-19ஆம் நிதியாண்டின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தேவையான குடிநீர் வசதி, மருத்துவம் மற்றும் ஆய்வுக்கூட உபகரணங்கள், சுற்றுச்சுவர், பேருகால பின் கவனிப்பு அறை, அவசர சிகிச்சை அறை, காத்திருப்பு அறை, தளவாட அறை, கழிவறை, மின் மற்றும் பிளம்பிங் வசதி மற்றும் புதுப்பித்தல் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதை இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். 



இந்நிகழ்ச்சியில், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) பானுமதி, எல்&டி வால்வ்ஸ் நிறுவன முதன்மை செயல் அலுவலர் மகேஷ்ஜோஸி, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாகரனாத்சிங், வட்டாட்சியர் பழனிசாமி, வட்டார மருத்துவ அலுவலர் பிரம்மிலா, மருத்துவ அலுவலர் அழகுராஜலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பின்னர், இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசியதாவது :- ஒரு நிறுவனம் எந்தப்பகுதியில் அமைந்திருக்கிறதோ அப்பகுதியில் இருக்கக்கூடிய மக்களின் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக அந்த நிறுவனமும் தங்களுடைய பங்கினை அளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்கு முன்மாதிரியாக எல்&டி வால்வ்ஸ் நிறுவனம் பொதுமக்களின் அடிப்படை தேவையான மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைத்திடும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையத்தை புனரமைத்து வழங்கியது பேருதவியாக உள்ளது. ஊரக பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்கு கிடைக்கக்கூடிய மருத்துவ வசதிகள் கிராமப்பகுதிகளில் வாழும் மக்களுக்கும் எவ்வித சிரமமில்லாமல் இலவசமாக கிடைத்திட வேண்டும் என்பதன் அடிப்படையில் அரசு மருத்துவ வசதிகளை வழங்கி வருகிறது. அரசுடன் இணைந்து தனியார் நிறுவனங்கள் சேவை புரிவது வரவேற்கத்தக்கது. 

இந்த ஆண்டு மட்டும் ரூ. 7 கோடி மதிப்பிலான மருத்துவ வசதிகளை எல்&டி வால்வ்ஸ் நிறுவனம் நிறைவேற்ற உள்ளனர். இதனால், கோவை மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகள் மற்றும் கிராமப்பகுதிகளில்; உள்ள மக்கள் பயன்பெறுவார்கள். திருமலையாம்பாளையம் பேரூராட்சி, ஜல்லிமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவி அறை, இருப்பு அறை, சிறந்த கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, சுகாதார நிலையம் முழுவதும் புதுப்பிக்கப்பட்ட எலக்ட்ரிக்கல் வசதி, பிளம்பிங் வசதி, ஜெனரேட்டர் மற்றும் ரூ. 3 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், ரூ. 1 லட்சம் மதிப்பிலான மரச்சாமான்கள், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ரூ. 50 லட்சம் மதிப்பீட்டில் எல்&டி வால்வ்ஸ் நிறுவனம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அளித்துள்ளனர். 



திருமலையாம்பாளையம் பேரூராட்சி சுற்றுவட்டாரப் பகுதிகளான 4 பழங்குடியின பகுதிகள், 2 மாநில செக்போஸ்ட், 13 தொலைதூர கிராமங்கள் உள்ளடக்கிய 29 கிராமங்கள், தேசிய நெடுஞ்சாலைப்பகுதி, 16 கல்லூரிகள், 50-க்கும் அதிகமான சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் அவற்றில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள், பாம்பு மற்றும் தேள் கடிகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் இந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. இம்மருத்துவ சேவைக்கு உதவிய எல்&டி வால்வ்ஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...