கோவை : அன்னூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறம் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை புழுக்கள் பிடித்த நிலையில் முட்புதரில் கண்டெடுக்கப்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்த அன்னூரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் பின்புறம் உள்ள முட்புதரில் இருந்து இன்று காலை குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, அந்த பகுதியினுள் சென்று பொதுமக்கள் பார்த்தபோது குழந்தை ஒன்று கிடப்பதை கண்டு அன்னூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு மருத்துவக் குழுவுடன் விரைந்து வந்த போலீசார், உயிருக்கு போராடிய நிலையில் முட்புதரில் இருந்த பெண் குழந்தையை மீட்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு பல்வேறு கட்ட முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டும், தொப்புள் கொடியில் புழுக்கள் இருந்ததால், குழந்தையின் உடல் நிலை மோசமடைந்தது. இதனையடுத்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், கோவை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, பெண் குழந்தையை முட்புதரில் வீசி சென்றது யார்..? என்பது குறித்தும் குழந்தையை கொலை செய்ய முட்புதரில் வீசி செல்லபட்டதா..? என்பது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.