நீலகிரி : குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் இன்று இளம் ராணுவ வீரர்களின் சத்தியபிரமாணம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ முகாமில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் உள்ள முகாம்களுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட அனுப்பி வைக்கப்படுவர். 46 வாரங்கள் பயிற்சி பெற்ற ராணுவ வீரர்களில் 274 பேர் பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாய் பணிபுரியும் சத்தியப்பிரமாண நிகழ்ச்சி நடந்தது. பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.

பின்னர், ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு நடந்த ராணுவ வீரர்களின் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. பயிற்சி வீரர்களின் கம்பீரமான அணி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட, பிரிகேடியர் ஆர்.எஸ். குரையா பயிற்சியின் போது சிறந்து விளங்கிய ராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். தங்கள் பிள்ளைகள் ராணுவ வீரர்களாய், அணிவகுத்து வந்த காட்சியை கண்ட வீரர்களின் பெற்றோர், நாட்டின் பாதுகாப்புக்காக அனுப்புவதை எண்ணி பெருமிதம் அடைந்தனர். பயிற்சியை முடித்த ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிகழ்ச்சியில் உயர் அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பெற்றோர்கள், என பலரும் கலந்து கொண்டனர்.