கோவையில் போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கான நில அளவீடு செய்யும் பணி துவக்கம்

கோவை : கருமத்தம்பட்டி அருகே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான நிலம் அளவிடும் செய்யும் பணி நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கருமத்தம்பட்டி அருகே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கடும் எதிர்ப்பை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் உயர் மின் கோபுரம் அமைப்பதற்கான நிலம் அளவிடும் செய்யும் பணி நடைபெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கருமத்தம்பட்டி அருகே மின் கோபுரம் அமைப்பதற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை கருமத்தம்பட்டி பகுதியை அடுத்துள்ள செம்மாண்டம் பாளையம் பகுதியில் உயர்மின் கோபுரம் அமைக்க நில அளவை செய்யும் பணிகள் நடைபெற்றது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, அங்கு அமைக்கப்பட்டுள்ள மின்கோபுரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தை தீவிரப்படுத்தினர். இதையடுத்து, நில அளவீடு செய்யும் பணிகள் தற்காலிகமாக கைவிடப்பட்டது.



இந்த நிலையில், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திடீரென நில அளவீடு செய்யும் பணிகள் துவங்கப் பட்டுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல, காவல்துறையினரும் ,அதிகாரிகளும் விவசாயிகளிடம் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், நில அளவீடு செய்பவர்கள் நிலத்தை விட்டு வெளியே செல்லும் வரை பொதுமக்கள் போராட்டத்தை கை விடுவதில்லை என தெரிவித்துள்ளனர். இதனால், கருமத்தம்பட்டியை சுற்றியுள்ள பகுதிகளில் பதட்டமான சூழல் வருகிறது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...