ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக கோவையைச் சேர்ந்த மேலும் ஒருவர் கைது

கோவை : ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு நபரை என்.ஐ.ஏ. கைது செய்தது.

கோவை : ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு நபரை என்.ஐ.ஏ. கைது செய்தது.

இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும், கேரளா மற்றும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்த நபர்கள் கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்தன. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 6 இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, அதில் கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதினுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதை உறுதி செய்து அவரை கைது செய்துள்ளனர். 

இதையடுத்து, அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான், கரும்பு கடையைச் சேர்ந்த ஹபியுபுல்லா, வின்சென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது உசேன் ஆகியோரையும் கைது செய்தனர்.

இந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக உக்கடம் பகுதியைச் சேர்ந்த சேக் இதாயத்துல்லா என்பவரை என்.ஐ.ஏ. இன்று கைது செய்துள்ளது. பின்னர், அவர் எர்ணாகுளம் என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...