கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட மேலும் 3 பேர் கைது

கோவை : கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட மேலும் 3 பேரை போலீசார் இன்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.


கோவை : கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்ட மேலும் 3 பேரை போலீசார் இன்று கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும், கேரளா மற்றும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்த நபர்கள் கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்தன. இதையடுத்து, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 6 இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு, அதில் கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதினுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதை உறுதி செய்து அவரை கைது செய்துள்ளனர். 

இதையடுத்து, நேற்று வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் இணைந்து அன்பு நகரைச் சேர்ந்த ஷாஜகான், கரும்பு கடையைச் சேர்ந்த ஹபியுபுல்லா, வின்சென்ட் ரோடு பகுதியைச் சேர்ந்த முகமது உசேன், ஆகியோர் வீடுகளில் அதிகாலை 4.30 மணி முதல் சோதனை நடத்தினர். இந்த சோதனையையடுத்து, கோவை மாநகர போலீசார் 3 பேரையும், பி.ஆர்.எஸ். வளாகத்தில் உள்ள சிறப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை செய்தததில், இவர்கள்

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கமான இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் மற்றும் சிரியா அமைப்பின் தீவிர ஆதரவாளர்கள் என்றும், இவர்களின் கொள்கைகள் மற்றும் தீவிரவாத செயல்களை உள்நோக்கத்துடன் இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மூலமாக பரப்புவதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, இவர்கள் 3 பேர் மீதும் யு.ஏ.பி.ஏ. சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில், இன்று மூன்று பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...