கோவை : உலக ரத்த கொடையாளர் தினத்தினை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக ரத்த கொடையாளர் தினத்தினை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற இரத்த கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணியினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இவ்விழிப்புணர்வு பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரகம் மற்றும் மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் மரு.பி. கிருஷ்ணா, துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் மரு.பானுமதி, கோவை மாவட்ட குருதி பரிமாற்றக்குழுமம் அலுவலர் மங்கையர்கரசி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது :- ஜூன் 14ம் நாள் உலக ரத்தக் கொடையாளர் தினமாக அனுசரிக்கப்படுகின்றது. ரத்த தானம் பற்றி பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இரத்த தானம் குறித்து தெளிவான புரிதல் அனைவருக்கும் ஏற்படுத்திடவும், உலக ரத்தகொடையாளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. ஏழை, எளிய கர்ப்பிணி தாய்மார்களுக்கு உயிர்காக்கும் ரத்தத்தை இலவசமாக தானம் செய்யவும், அறுவைச் சிகிச்சை மற்றும் விபத்து காலங்களில் ரத்தம் தேவைப்படுவோர்க்கு எவ்வித தடையுமின்றி ரத்தம் கிடைக்கபெறவும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பயனுள்ளதாக அமையும். விழிப்புணர்வுகளை அறிந்து கொண்ட அனைவரும் தன்னார்வமாக ரத்ததானம் செய்திட முன்வரவேண்டும்.
கோவை மாவட்டத்தில், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை ஆகிய 4 மருத்துவமனைகளில் அரசு ரத்த வங்கிகளும், 19 தனியார் இரத்த வங்கிகளும் செயல்பட்டு வருகின்றது. 6 ரத்த சேமிப்பு மையங்களும் செயல்பட்டு வருகின்றது. அரசு இரத்த வங்கிகள் சார்பில் 2018 - 19ஆம் வருடம் 181 முகாம்கள் நடத்தப்பட்டு 16,107 யுனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் www.tngovbloodbank.in என்ற வலையதளத்தில் வாயிலாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரத்த வங்கிகளில் இரத்த சேகரிப்பு குறித்த விவரங்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். மேலும், தன்னார்வமாக ரத்த தானம் வழங்க ஆர்வும் உள்ளவர்கள் தங்களுடைய சுய விவரத்தினை பதிவு செய்து கொள்ளலாம். இந்த வலைதளம் மாநில அளவில் ஒருங்கிணைக்ப்பட்டு ரத்ததான முகாம்கள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. ரத்த கொடையாளர்கள், இரத்தம் தேவைப்படுவோர் இணை தளத்தின் மூலம் அறிந்துகொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம், என தெரிவித்தார்.