திருப்பூர் : திருப்பூர் அருகே இரண்டு கார்கள், நான்கு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், பேக்கரிக் கடைக்குள் கார் பாய்ந்ததில், 10-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திருப்பூர் : திருப்பூர் அருகே இரண்டு கார்கள், நான்கு இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில், பேக்கரிக் கடைக்குள் கார் பாய்ந்ததில், 10-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம்-திருப்பூர் சாலை மகாலட்சுமி நகரில் இன்று சாலையைக் கடக்க முயன்ற இருசக்கர வாகனம் மீது மோதிய டொயோட்டா எட்டியாஸ் நிறுவனத்தின் சோதனை ஓட்டக் கார் ஒன்று அதன் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் நின்று கொண்டிருந்த ஆம்னி வேன் மற்றும் நான்கு இருசக்கர வாகனங்கள் மீதும் மோதியது. பின்னர், அந்தக் கார் பேக்கரிக் கடைக்குள் புகுந்து விபத்து ஏற்பட்டது.

இதில், எட்டியாஸ் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி பலூன் வெளியானதால், அதனை ஓட்டிவந்த சுப்பிரமணியம் (37), பாலமுருகன் (25) ஆகிய இருவரும், பேக்கரி கடையில் பணியாற்றிய ரத்தினசாமி (29) என்பரவதும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

மேலும், கடை முன்பாக வாகனங்களை நிறுத்திவிட்டு அமர்ந்திருந்த மேலும் 10 பேரும் உயிர்தப்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடம் விரைந்து வந்த பல்லடம் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர். இச்சம்பவத்தால் பல்லடம்-திருப்பூர் சாலையில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
