மருத்துவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா

கோவை : கொல்கத்தாவில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினரும், இந்திய மருத்துவ சங்கத்தினரும் இணைந்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : கொல்கத்தாவில் மருத்துவர் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்தும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினரும், இந்திய மருத்துவ சங்கத்தினரும் இணைந்து கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில், உயிரிழந்த நோயாளியின் உறவினர்கள் பயிற்சி மருத்துவர் ஒருவர் மீது சரமாரி தாக்குதலை நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதில், அரசு மருத்துவர்களுக்கு ஆதரவாக தனியார் மருத்துவமனை சங்கத்தினரும் இணைந்துள்ளனர். அதேபோல, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மருத்துவர்கள் இன்று காலை போராட்டங்களில் ஈடுபட்டனர். 



இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இந்திய மருத்துவ சங்கத்தினரும், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினரும் இணைந்து கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கலந்து கொண்ட மருத்துவர்கள், மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். அதேபோல, மருத்துவர்கள் மீதும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர். மருத்துவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இந்தியாவில் நிலவுவதாகவும், ஆகவே மருத்துவமனை பாதுகாப்பு சட்டத்தை வலுப்படுத்த வேண்டும் எனவும், மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு பிணை கொடுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளனர்.



மருத்துவர்களுக்கான பாதுகாப்பை அரசு உறுதி செய்யும் வரை எங்களின் போராட்டம் தொடரும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் கனகராஜ், இந்திய மருத்துவ சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாரியப்பன், செயலாளர் சத்தியன் மற்றும் பல்வேறு மருத்துவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...