கோவை : வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழகத்தின் அனைத்து கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பற்று இருக்கும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக யூ.ஒய்.இ.ஜி.பி. என்ற கடன் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உற்பத்தி தொழில்களை அதிகபட்சம் ரூ. 10 லட்சம் முதலீட்டிலும், சேவை தொழில்களை அதிகபட்சமாக ரூ. 3 லட்சம் முதலீட்டிலும், வியாபார தொழில்களை குறைந்தபட்சம் ரூ. 1 லட்சம் முதலீட்டிலும் தொடங்கலாம். மேற்கண்ட மனுதாரர்களுக்கு மாநில அரசால் 25 சதவீதம் மானியம் அதிகபட்சமாக ரூ.1,25,000 வழங்கப்படும். 5 சதவீத சுய முதலீடு அவசியமாகும்.
இத்திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க 18 வயதுக்கு மேற்பட்ட தனிநபர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1,50,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க பொதுபிரிவினருக்கு வயது வரம்பு 35 ஆகவும், சிறப்புப்பிரிவினருக்கு 45-ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மனுதாரர் குறைந்தது 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்திலோ அல்லது மாவட்ட தொழில் மையத்தில் செயல்பட்டு வரும் இலவச பொது சேவை மையம் மூலமாகவோ, விண்ணப்பதாரருடைய சரியான தகவல்களை பூர்த்தி செய்த பின்னர், பள்ளி மாற்று சான்றிதழ், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை, தாசில்தாரரிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ், சாதி சான்றிதழ், விலைப்பட்டியல் ஆகியவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து அனுப்ப வேண்டும். பின்னர், பதிவிறக்கம் செய்த திட்ட அறிக்கை படிவத்தை பூர்த்தி செய்து, கையொப்பமிட்ட விண்ணப்பம் மற்றும் உறுதிமொழி படிவத்தை மாவட்ட தொழில்மையம் நேர்காணலுக்கு அழைக்கும்போது, நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த ஆண்டு திட்டத்தின் கீழ், 295 நபர்கள் ரூ.175 லட்சம் மானியத்துடன் ரூ.600 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.