வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ.4.60 லட்சம் மோசடி : கோவையில் தலைமறைவாக இருந்தவர் கைது

கோவை : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 4.60 லட்சம் மோசடி செய்த நபரை கோவை மாநகர குற்றப்பிரிவு கைது செய்தனர்.

கோவை : வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 4.60 லட்சம் மோசடி செய்த நபரை கோவை மாநகர குற்றப்பிரிவு கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் பொம்மன்ன செட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் டி. ஜானகி ராமன். இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த விஷ்ணு பிரியா என்பவரின் மூலம் கோவையை சேர்ந்த மார்கோஸ் நவமணி என்பதுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சரவணம்பட்டியில் உள்ள மார்கோஸ் நவமணியின் அலுவலகத்திற்கு வந்த ஜானகி ராமன், வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதற்காக, பாஸ்போர்ட் மற்றும் தவணை முறையில் ரூ.1,90,000-ஐ கொடுத்துள்ளார். இதேபோல, ஜானகிராமனுடன் சேர்த்து நண்பர்கள் 5 பேரும் வெளிநாட்டு வேலைக்காக ரூ. 4,60,000 கொடுத்துள்ளனர். பணத்தைப் பெற்ட்திக் கொண்ட மார்கோஸ், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள், தங்களது பாஸ்போர்ட் மற்றும் பணத்தையும் பெற்றுத் தரக்கோரி கோவை மாநகர குற்றப் பிரிவில் கடந்த ஜனவரி 19-ம் தேதி புகார் அளிக்கப்பட்டதன் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மார்கோஸ் தலைமறைவானார். இந்த நிலையில், அவரை போலீசார் இன்று கைது செய்தனர். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...