அரசு பள்ளிகளை பாதுகாத்திடக் கோரி இந்திய மாணவர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் : காவல் துறையினருடன் தள்ளுமுள்ளு

கோவை : கோவையில் அரசு பள்ளிகளை பாதுகாத்திட கோரி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


கோவை : கோவையில் அரசு பள்ளிகளை பாதுகாத்திட கோரி கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.



அரசு பள்ளிகளை பாதுகாத்திடுதல், நீட் தேர்வை ரத்து செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தினர். இதன் ஒரு பகுதியாக, கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தை இந்திய மாணவர் சங்கத்தினர் ஊர்வலமாக சென்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காவல்துறை தடுப்புகளை மீறி அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டது. 



இதையடுத்து, மாணவர்களை குண்டுக்கட்டாக தூக்கி சென்று காவல் துறையினர் கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 7 மாணவிகள் உட்பட 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். 



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...