மேட்டுப்பாளையம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் அகப்பட்டது சிறுத்தை

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.


கோவை : மேட்டுப்பாளையம் அருகே மோத்தேபாளையத்தில் கடந்த இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள மோத்தேபாளையம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக மலை அடிவாரப் பகுதிகளில் நுழைந்து ஆடு, மாடு மற்றும் வளர்ப்பு நாய்களை சிறுத்தை ஒன்று வேட்டையாடி வந்தது. சிறுமுகை வனச்சரகத்திற்குட்பட்ட சென்னாமலை கரடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் இந்த சிறுத்தை நடமாட்டத்தால் கிராம மக்கள் விசாய நிலங்களுக்கு செல்லவே அச்சமடைந்தனர். இதனால், அச்சமடைந்த பொதுமக்கள் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில், கடந்த மாதம் வனத்துறை சார்பில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கபட்டு வந்த நிலையில், சிறுத்தை இருப்பது உறுதி செய்யபட்டது.



இதனை தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், சிறுமுகை வனத்துறையினர் சத்தியமங்கலத்தில் இருந்து கூண்டு கொண்டு வரப்பட்டு சென்னாமலை அடிவாரத்தில் வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று காலை வனத்துறை வைத்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. சிறுமுகை வனச்சரகர் மனோகரன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் பிடிபட்ட சிறுத்தையை பத்திரமாக மீட்டு டெம்போ வாகனத்தில் ஏற்றி சத்தியமங்கலம் வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர். பல மாதங்களாக கால்நடைகளை வேட்டையாடி பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...