கடந்த 10 ஆண்டுகளில் 108 சேவையின் மூலம் 3,42,820 நோயாளிகள் பயனடைந்துள்ளனர்

கோவை : 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் 3,42,820 நோயாளிகள் இந்த சேவையை பயன்படுத்தியுள்ளதாக 108 ஆம்புலன்சின் மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

கோவை : 108 ஆம்புலன்ஸ் சேவையில் கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் மட்டும் 3,42,820 நோயாளிகள் இந்த சேவையை பயன்படுத்தியுள்ளதாக 108 ஆம்புலன்சின் மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

108 சேவை கடந்த செப்டம்பர் மாதம் 2008 முதல் துவக்கப்பட்டு தற்பொழுது மாநிலம் முழுவதும் 926 வாகனங்களுடன் மக்கள் அழைத்த 12 நிமிடத்திற்குள் நகர்ப்புறங்களிலும் 16 நிமிடத்தில் கிராமப்புறங்களுக்கும் சென்றடைகின்றது. கோவை மாவட்டத்தில் மட்டும் 39 ஆம்புலன்சுகள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு மக்களுக்கு துரித சேவை அளித்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு எளிதில் செல்வதற்கு வசதியாக 4 பிரத்யோக நான்கு சக்கர ஜீப் வாகனங்களும், 2 பச்சிளம் குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இன்குபேட்டர் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் மற்றும் நகர்ப்புறங்களில் போக்குவரத்து நெரிசலை சமாளித்து செல்லும் வகையில், இருசக்கர வாகனமும் அடங்கும். மற்ற தனியார் வாகனங்களில் ஆக்சிஜன் வசதியை தவிர வேறு எந்த ஒரு வசதியும் இல்லாத நிலையில், 108 ஆம்புலன்சில் வாகனத்தில் உள்ளேயே முதல் உதவி செய்வதற்கு வசதியாக அவசர கால மருத்துவ உதவியாளர் உடன் வென்டிலேட்டர், இ.சி.ஜி. மல்டி பாரா மானிட்டர் மற்றும் அவசர காலங்களில் உயிர் காக்கக் கூடிய 50-க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள் இருப்பதால் நோயாளி சம்பவ இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அபாய கட்டத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறார். 



கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 108 சேவை துவங்கியது முதல் தற்போது வரை இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்துள்ளார்கள். இதில், சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் மட்டும் 83,425 நபர்களை முதலுதவி செய்து மருத்துவமனையை அனுத்துள்ளார்கள். மேலும், பிரசவத்திற்காக கர்ப்பிணி தாய்மார்கள் சுமார் 65,000 மேற்பட்டோர் பயனடைந்துள்ளார்கள். பொதுமக்கள் அழைக்கும் இடம் எளிதில் கண்டறிவதற்கு வசதியாக 108 அவசரம் என்ற மொபைல் ஆப் வசதி கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து 108 சேவை மையத்தை அழைக்கும் பொழுது இன்னும் விரைவில் எங்களால் அழைப்பவர்கள் இடத்தினை சென்றடைய முடியும் என்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...