கோவை : மருதமலை அருகே தெருநாய்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த புள்ளி மான் வனத்துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

மருதமலை வனப்பகுதி அருகே உள்ள வனப்பகுதியில் சுற்றி திரிந்த 3 வயது புள்ளிமானை அங்கிருந்த தெரு நாய்கள் விரட்டத் தொடங்கின. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், நாய்களை துரத்திவிட்டு, படுகாயமடைந்த மானை பத்திரமாக மீட்டனர். பின்னர், வடவள்ளி பகுதியில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மருதமலை வனத்துறையின் தங்கும் விடுதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, முழு சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் வனப்பகுதியில் விடப்பட்டது.