ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் கோவையில் கைது

கோவை : கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை தேசிய புலனாய்வு முகமையினர் இன்று கைது செய்தனர்.

கோவை : கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபரை தேசிய புலனாய்வு முகமையினர் இன்று கைது செய்தனர்.

இலங்கையில் தேவாலயங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புக்கும் கேரளா மற்றும் கோவையில் உள்ள சில இளைஞர்களுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியது. மேலும், இந்த நபர்கள் கேரளா உள்பட தென்னிந்திய மாநிலங்களில் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டிருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் கசிந்தன. இதனிடையே, கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதின் (கோவை), அசாரூதின் (நஞ்சுண்டாபுரம், போத்தனூர்), சேக் ஹித்யதுல்லா (அலமீன் காலனி), எம். அபுபக்கர் (குனியமுத்தூர்), சதாம் உசேன் (கரும்புக்கடை), இப்ராகிம் சஹின் (மணியா தோட்டம்) ஆகிய 6 இளைஞர்களுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பிருப்பதாக கொச்சினில் கடந்த மாதம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

அதனடிப்படையில், நேற்று கோவையில் சம்பந்தப்பட்ட நபர்களின் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தினர். சோதனை நடத்தப்பட்ட பகுதிகளில் கடந்த ஆறு மாத காலமாக நடைபெற்ற ஆவணங்கள், வங்கி கணக்கு, பாஸ்போர்ட், தொலைபேசி இணைப்பு போன்றவை குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, கோவையைச் சேர்ந்த முகமது அசாரூதின், அசாரூதின், சேக் ஹித்யதுல்லா, எம். அபுபக்கர், சதாம் உசேன், இப்ராகிம் சஹின் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முகமது அசாரூதினுக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்பது, கருத்துக்களை பரப்புவது, உதவி செய்வது போன்ற குற்றத்தின் கீழ் முகமது அசாருதீனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர் மீது யு.ஏ.பி.ஏ (unlawful activity prevention act) சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட முகமது அசாரூதீனை நாளை கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அசாரூதீனுக்கு இலங்கைக் குண்டு வெடிப்பில் முக்கிய மூளையாக செயல்பட்ட ஜக்ரான் ஹசீமுடன் பேஸ்புக்கில் தொடர்பு வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...