கோவை, நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிகழ்ந்த வாகன விபத்துகள் எவ்வளவு தெரியுமா..?

கோவை : மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகமாக வாகன விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு வாகன தணிக்கை செய்தும், மோட்டார் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்ததாலும் இவ்வாண்டில் விபத்துகள் குறைய ஏதுவாக அமைந்தது.

கோவை : மேற்கு மண்டலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் உள்ள காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகமாக வாகன விபத்துக்கள் ஏற்படும் பகுதிகளைக் கண்டறிந்து, அங்கு வாகன தணிக்கை செய்தும், மோட்டார் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்ததாலும் இவ்வாண்டில் விபத்துகள் குறைய ஏதுவாக அமைந்தது. 

மொத்த வாகன விபத்துக்களில் 2018-ம் ஆண்டு முதல் இந்த நாள் வரையில் 6,650 வழக்குகளும், 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 5,675 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 975 வழக்குகள் குறைவாகும். 2018-ம் ஆண்டில் பதியப்பட்டுள்ள வழக்குகளில் 1260 இறப்பு வழக்குகளாகும். இவ்வாண்டில் இதுவரை பதியப்பட்டுள்ள வழக்குகளில் 1012 இறப்பு வழக்குகளாகும். இது சென்ற ஆண்டை விட 248 வழக்குகள் குறைவாகும். இது 19.68 % குறைவாகும். 

நீலகிரி மாவட்டத்தில் சிறப்பான செயல்பாட்டால் அதிகபட்சமாக 95 சதவீத வாகன விபத்து இறப்பு வழக்குகளும், 54 சதவீத வாகன விபத்து வழக்குகளும் குறைந்துள்ளது. மேலும், காவல்நிலையம் மூலமாக வாகன ஓட்டிகளுக்கு விபத்துக்கள் பற்றி 22,674 விழிப்புணர்வு மற்றும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதால் விபத்துக்கள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டில் சாலை விதிகளை மதிக்காமல் சென்ற நபர்கள் மீது 6,90,874 மோட்டார் வாகன சிறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 3,57,132 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 3,33,742 வழக்குகள் அதிகமாகும். 

தலைக்கவசம் அணியாமல் சென்றவர்கள் மீது 2018-ம் ஆண்டு முதல் இந்த நாள் வரையில் 1,59,099 வழக்குகள் பதியப்பட்டது. இவ்வாண்டில் இதுவரை 3,96,109 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 2,37,010 வழக்குகள் அதிகமாகும். 4 சக்கர வாகனங்களில் இருக்கை பெல்ட் அணியாமல் சென்றவர்கள் மீது 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 67,746 வழக்குகள் பதியப்பட்டது. இவ்வாண்டில் இதுவரை 90,669 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 22, 923 அதிகமாகும். இவ்வாண்டில் 43,185 ஓட்டுநர் உரிமங்கள் ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டு 32,343 ஓட்டுநர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. 

குடிபோதை வழக்குகள் பொறுத்தவரையில் 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 5,050 வழக்குகளும், 2019-ம் ஆண்டில் இதுவரையில் 9,601 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 4,551 வழக்குகள் அதிகமாகும். 

அதிவேகமாக வாகனத்தை இயக்கிய வழக்குகளில் 2018-ம் ஆண்டு முதல் இந்த நாள் வரையில் 5,002 வழக்குகளும், 2019-ம் ஆண்டில் இதுவரையில் 7,795 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 2,793 வழக்குகள் அதிகமாகும். 

அதிக பழு ஏற்றி வாகனத்தை இயக்கிய வழக்குகளில் 2018-ம் ஆண்டு முதல் இந்த நாள் வரையில் 706 வழக்குகளும், 2019-ம் ஆண்டில் இதுவரையில் 1,478 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 772 வழக்குகள் அதிகமாகும். அலைபேசி பயன்படுத்தி கொண்டு வாகனத்தை இயக்கிய வழக்குகளில் 2018-ம் ஆண்டு முதல் இந்த நாள் வரையில் 33,791 வழக்குகளும், 2019-ம் ஆண்டில் இதுவரையில் 46,305 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 12,514 வழக்குகள் அதிகமாகும். 

வாகனங்களில் ஆட்கள் ஏற்றி செல்வது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் 2018-ம் ஆண்டு முதல் இந்த நாள் வரையில் 17,251 வழக்குகளும், 2019-ம் ஆண்டில் இதுவரையில் 20,970 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட 3,719 வழக்குகள் அதிகமாகும்.

விபத்து நடக்கக் கூடிய இடங்களைக் கண்டறிந்து பிளேக் ஸ்பாட் பகுதிகளாக அறிவித்து அவ்விடங்களில் தக்க சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விழிப்புணர்வு முகாம்கள் பொதுமக்களிடம் கல்லூரி மற்றும் பள்ளிகள் மற்றும் ஓட்டுநர்களிடம் இந்த வருடம் இதுவரை 22,674 விழிப்புணர்வு நடவடிக்கைகள் நடத்தப்பட்டு (நீலகிரி மாவட்டத்தில் 13,348) சாலை விபத்துக்களைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...