கோவை : கொடிசியா மற்றும் ரோட்டரி கிளப் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி வரும் ஜுலை 19-ம் தேதி தொடங்குகிறது.

கோவையில் மாணவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, கடந்த 2015-ம் ஆண்டு முதல் சிறு,குறு தொழில் சங்கம் சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொடிசியா மைதானத்தில் இந்த ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி வரும் ஜுலை 19-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடக்கிறது. இலாப நோக்கமற்ற முறையில் நடத்தப்படும் இந்தக் கண்காட்சியில், 100-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைத்து, லட்சக்கணக்கான புத்தகங்கள் தள்ளுபடி விற்பனையில் விற்கப்படுகிறது.

மேலும், கோவை ரோட்டரி கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கதை எழுதும் போட்டி நடத்தப்படுகிறது. 'எனக்கு பிடித்தமான புத்தகம்', காந்தியின் சிந்தனைகள்' ஆகிய தலைப்புகளில் 8 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் கலந்து கொள்ளலாம். 3 முதல் 6 பக்கங்கள் வரையில் கதை எழுதி ஜுலை 5-ம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும். வெற்றியாளர்களுக்கு ரூ. 3 லட்சம் வரையிலான பரிசுகள் வழங்கப்படுகிறது. இதில், தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு சிறந்த எழுத்தாளர்கள் மூலம் பரிசுகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும், விபரங்களுக்கு 7502722000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.