சமத்தூர் மனுநீதி முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ. 7,71 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய கோவை மாவட்ட ஆட்சியர்

கோவை : கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சமத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ. 7.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.

கோவை : கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள சமத்தூர் கிராமத்தில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 59 பயனாளிகளுக்கு ரூ. 7.71 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.

ஆனைமலை வட்டம், சமத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இன்று நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில், வருவாய் கோட்டாட்சியர் ரவிக்குமார், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் .இரா. நல்லதம்பி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் அமுதன், ஆனைமலை வட்டாட்சியர் வெங்கடாச்சலம் உள்ளிட்ட பல்வேறு அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 



பின்னர் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி பேசியதாவது :- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, தமிழக அரசால் சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, அரசை தேடி மக்கள் என்ற நிலைமாறி, மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் என்ற உன்னத நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் நலத்திட்டங்களை பொதுமக்கள் மென்மேலும் தெரிந்து கொள்ளும் வகையில், அனைத்துத்துறை அரசு முதன்மை அலுவலர்களை கொண்டு மக்கள் தொடர்பு முகாம் மாதம் ஒருமுறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமப்புறங்களில் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்துத்துறை உயர் அலுவலர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவிலான அரசு அலுவலர்களையும், கடைகோடி கிராமங்களிலுள்ள மக்களையும் இணைக்கும் பாலமாக மனுநீதி நாள் முகாம்கள் அமைகின்றன. அதன்படி, இன்று ஆனைமலையில் வட்டத்திற்குட்டப்டட சமத்தூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் இம்முகாமில் நலத்திட்ட உதவிகள் பெற 15 நாட்களுக்கு முன்னதாக இப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அவற்றினை பரிசீலனை செய்து அதன்படி, உடனடி நடவடிக்கையாக இவ்விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. அதேபோல், இன்றைய தினம் இம்மனுநீதி முகாமில் பெறப்படும் மனுக்கள் மீதும், தொடர்புடைய அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று, தமிழக அரசால் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்களைப் பயன்படுத்தி, பயனாளிகள் மென்மேலும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண வேண்டும்.

மேலும், முதலமைச்சரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும், மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் குடிநீர் தட்டுப்பாடற்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு, குடிநீர் தொடர்பாக எழுப்பப்படும் கோரிக்கைகளின் மீது உடனடியாக தனிக்கவனம் மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்கள். அதன்படி, கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றது.

அதுபோலவே, மழைக்காலம் துவங்க உள்ளதால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவும் சூழ்நிலை உருவாகும். எனவே, பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது அவசியமாகும், தங்கள் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கிராமங்கள் தோறும் முழு சுகாதாரப்ப பணிகளை சூழற்சி முறையில் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் எவ்வித தொற்றுநோய்களும் ஏற்படாத வகையில், பொதுமக்களும் அரசு நிர்வாகத்துடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தொடர்ந்து, சமூக பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 24 பயனாளிகளுக்கு ரூ. 2.88 லட்சம் மதிப்பிலும், வருவாய்த் துறையின் மூலம் இலவச வீட்டுமனைப் பட்டா 7 பயனாளிகளுக்கு ரூ. 68,072 மதிப்பிலும், வேளாண்மைத்துறையின் மூலம் 16 பயனாளிகளுக்கு ரூ. 2,05,899 மதிப்பிலும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ. 1,60,000 மதிப்பிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் தையல் இயந்திரம் 2 பயனாளிகளுக்கு ரூ. 11,200 மதிப்பிலும், சலவைப்பெட்டி 8 பயனாளிகளுக்கு ரூ. 38,000 என மொத்தம் 59 பயனாளிகளுக்கு ரூ. 7,71,171 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கியதுடன், முகாமில் கலந்துகொண்ட மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...