கோவையில் வரும் 15-ம் தேதி தனியார் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 15-ம் தேதி நடைபெற இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 15-ம் தேதி நடைபெற இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார். 

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :- கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரிவதற்கான ஆசிரியர்களுக்கு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமனது ஆசிரியர்களுக்காக மட்டும் சிறப்பு நிகழ்வாக நடைபெற உள்ளதால் ஆசிரியர் பயிற்சி பெற்ற பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், உடற்கல்வி ஆசிரியர்கள் என ஆண், பெண் இருபாலரும் தங்களது கல்விச்சான்றுடன் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்து கொள்ள வயது வரம்பு இல்லை. பல முன்னணி தனியார் பள்ளிகள் இம்முகாமில் கலந்து கொண்டு பல்வேறு ஆசிரியர் பணிக்காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர். 

இம்முகாமில் தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு பணி நியமன ஆணை அப்போதே வழங்கப்படும். இம்முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் பள்ளிகள் மற்றும் வேலைநாடும் மனுதாரர்கள் www.ncs.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள அனுமதி முற்றிலும் இலவசம். எனவே, ஆசிரியர்கள் அதிக அளவில் கலந்து கொண்டு இம்முகாமினை பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று பயனடையலாம், என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...