பனியன் சார்ந்த கூலி தொழில்களின் ஜாப் வொர்க்குகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிக்க வேண்டும் : சைமா வலியுறுத்தல்

திருப்பூர் : பனியன் சார்ந்த கூலி தொழில்களின் ஜாப் வொர்க்குகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சைமா வலியுறுத்தியுள்ளது.

திருப்பூர் : பனியன் சார்ந்த கூலி தொழில்களின் ஜாப் வொர்க்குகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சைமா வலியுறுத்தியுள்ளது. 

இது தொடர்பாக சைமா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- 100 ஆண்டுகளுக்கும் மேலாக திருப்பூர் பனியன் தொழிலில் 5 லட்சம் பேர் நேரடியாகவும், 3 லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் பெரிய நிறுவனங்களிலிருந்து கட்டிங் செய்த பனியன், ஜட்டிகளை வாங்கி தைத்து, அதில் கிடைக்கும் கூலியை வைத்து ஏராளமான பெண்கள் குடும்பங்களை நடத்தி வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்களைப் போல இவர்களும் ஜி.எஸ்.டி. செலுத்த வேண்டும் என்ற உத்தரவால், அவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர். 

மிகவும் வறட்சியான கிராமங்களில் உள்ள ஏழை மக்களுக்கு இந்த பனியன் தொழில் மிகப்பெரிய உதவியாக இருக்கிறது. ஆகவே, பனியன் சார்ந்த தொழில்களுக்கும், ஏழை விவசாய மக்களுக்கும் உதவியாக இருக்கும் பனியன் சார்ந்த ஜாப் வொர்க் பில்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். மேலும், கூலிக்கு தயார் செய்து கொடுக்கும் யூனிட்டுகளை நடத்துபவர்கள் அதிகம் படிக்காதவர்கள் என்பதால், ஜி.எஸ்.டி. வசூலித்துக் கட்டி கணக்கு வைக்க இயலாது. மேலும், வறட்சியான கிராமங்களில் இந்த பனியன் சார்ந்த ஜாப் வொர்க் செய்யும் கிராம மக்கள் ஓரளவிற்கு வேலை வாய்ப்பு பெறுகிறார்கள். எனவே, பனியன் சார்ந்த கூலி தொழில் பில்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்களிக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...