கோவை : தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசன் சார்பில் சர்வதேச ஃபுட் மற்றும் கிச்சன் பயன்பாட்டுப் பொருட்களின் கண்காட்சி மதுரையில் வரும் 12-ம் தேதி தொடங்குகிறது.

மதுரையில் வரும் 12-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் சர்வதேச ஃபுட் மற்றும் கிச்சன் பயன்பாட்டுப் பொருட்களின் கண்காட்சி நடக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் 150 நிறுவனங்களும், 20-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்களும் கலந்து கொண்டனர். இந்தக் கண்காட்சியின் மூலம் ரூ. 172 கோடி வருமானம் ஈட்டப்பட்டது. இந்த ஆண்டு 30-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட இறக்குமதியாளர்கள் கலந்து கொள்ள உள்ள உள்ளனர். கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு வருமானம் இரட்டிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக சேம்பர் டவரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கண்காட்சியின் தொழில்நுட்ப மற்றும் மீடியாப்பிரிவின் தலைவர் ஜே.கே. முத்து கூறுகையில், "வைபரன்ட் குஜராத்தை மையமாகக் கொண்டு வைபரன்ட் தமிழ்நாடு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 20-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று, அந்த நாடுகளின் சாலைகளில் நிகழ்ச்சி நடத்தி வர்த்தகர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியினது, வியாபாரத்தை விரிவுபடுத்தவும், முதலீடு செய்யும் வாய்ப்புகளைக் கொடுக்கும் அடித்தளமாக அமைந்துள்ளது. மேலும், கோவையைச் சேர்ந்த ஃபுட் மற்றும் கிச்சன் பயன்பாட்டுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த அழைப்பு விடுக்கப்படுகிறது," என்றார்.
தொடர்ந்து, வைபரன்ட் தமிழ்நாடு குழுவின் தலைவர் கே. திருப்பதிராஜன் பேசுகையில், " கிழக்கு நாடுகளான மடகாஸ்கர், மொரீசியஸ் மற்றும் நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இறக்குமதியாளர்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர். மாநிலத்தில் உள்ள வர்த்தகர்களுக்கு இது சிறந்த வாய்ப்பாகும். சர்வதேச அளவில் ஒப்பந்தங்களைச் செய்து, மாநிலத்தின் எல்லையைக் கடந்தும் வளர்ச்சி பெற முடியும்," என்றார்.