ஆனைகட்டி அரசு தொழிற்பயிற்சி மையத்தில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 15-ம் தேதி கடைசிநாள்

கோவை : ஆனைகட்டி பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 15-ம் தேதி கடைசிநாளாகும்.

கோவை : ஆனைகட்டி பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி மையத்தில் சேருவதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க 15-ம் தேதி கடைசிநாளாகும். 

ஆனைகட்டி பழங்குடியினருக்கான அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தற்போது தற்காலிகமாக கோவை, மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆனைகட்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2019-ம் கல்வி ஆண்டிற்கான பயிற்சியாளர்கள் சேர்க்கை விண்ணப்பஙகள் ஆன்லைன் மூலம் கடந்த 3-ம் தேதி முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் முறையில் பதிவேற்றம் செய்ய 15-ம் தேதி கடைசி நாளாகும். 

ஆனைகட்டி தொழிற் பயிற்சி நிலையம் பிரத்யேகமாக பழங்குடியினருக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தொழிற் பயிற்சி நிலையத்தில் எலக்ட்டிரிசன், எம்.எம்.வி. ஃபிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், வயர்மேன், வெல்டர் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பிரிவுகளில் சேர்க்கை இரு பாலாருக்கும் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு என்ற அடிப்படையில் நடைபெற உள்ளது. பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தினை www.skilltraining.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, விபரங்களை பூர்த்தி செய்து நேரடியாக வந்து விண்ணப்பிக்க வேண்டும். 

மேலும், பயிற்சியாளர்களுக்கான பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் பிரதி மாதமும் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அனைத்து பயிற்சியாளர்களுக்கும் சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக் கருவிகள், விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி இலவசமாக வழங்கப்படும். தொழிற்பிரிவுகளைப் பொறுத்து பயிற்சியாளர்கள் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினர் பயிற்சியாளர்களுக்கு இலவச உணவு வசதியுடன் தங்கும் விடுதி வழங்கப்படும். 

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் கேம்பஸ் இன்டர்வ்யூ மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற நடவடிக்கை எடுக்கப்படுகிறது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...