கோவை : கோவை விமானநிலைய விரிவாக்கப் பணிகளுக்காக 627 ஏக்கர் நிலங்களையும் பயன்படுத்த வேண்டும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரியை சந்தித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வலியுறுத்தினார்.

டெல்லியில் மத்திய வேளாண்மை, விவசாயிகள் நலன், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் நரேந்திரசிங் டோமரை, தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நேற்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2018-19-ம் ஆண்டிற்கான அடிப்படை மானியம் ரூ. 876.93 கோடி, 2017-18-ம் ஆண்டிற்கான செயலாக்க மானியம் ரூ. 194.78 கோடி நிதியினை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பிரதம மந்திரியின் அனைவருக்குமான வீடு வழங்கும் திட்டத்தில் விடுபட்ட 8 லட்சம் பயனாளிகளை இணைக்க அனுமதி வழங்கவும் கோரிக்கை மனுவினை அளித்தார்.
இந்த சந்திப்பின் போது ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு கூடுதல் தலைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கா. பாஸ்கரன் இருந்தனர்.
இதே போல, மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரம் மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்திப் சிங் பூரியை சந்தித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்து பேசினார். அப்போது, கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காகக் கையகப்படுத்த பணிகள் மேற்கொண்டுள்ள 627.89 ஏக்கர் நிலத்தை முழுமையும் பயன்படுத்தக் கோரிக்கை விடுத்தார்.