கோவை : குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு காரமடை ஆர்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்து விழிப்புணர்வை மேற்கொண்டனர்.

சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் உலகம் முழுவதும் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, டாக்டர். ஆர்.வி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காரமடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் விநியோகித்தனர். இதில், 'குழந்தை தொழிலாளர்களை ஒழிப்போம், அவர்கள் வாழ்வைக் காப்போம்', 'குழந்தை தொழிலாளர் இல்லாத புது உலகம் படைப்போம்', 'இன்றைய குழந்தைகள் நாளை நம் நாட்டின் குடிமகன்கள்' என்ற வாசகங்கள் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் எஸ். பிரபாகரன், ஆங்கிலத் துறை பேராசிரியர் வெங்கடேசன் கலந்து கொண்டதோடு, கல்லூரி முதல்வர் வே. சுகுணா தலைமையில் இதற்கான ஏற்பாடுகளையும் செய்து இருந்தனர்.