திருப்பூரில் குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்ட மாணவர்களுக்குக் கல்வி ஊக்கத் தொகை வழங்கல்

திருப்பூர் : குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, தற்போது கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு திருப்பூர் மாவட்ட தொழில்துறை சார்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

திருப்பூர் : குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு குழந்தை தொழிலாளர்களாக இருந்து மீட்கப்பட்டு, தற்போது கல்வியில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு திருப்பூர் மாவட்ட தொழில்துறை சார்பில் கல்வி ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. 



உலகெங்கும் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் நாள் "குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்" கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், திருப்பூர் மாவட்ட தொழில்துறை சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், குழந்தை தொழிலாளர்களாக மீட்கப்பட்ட மாணவ மாணவிகள், சைல்ட் லைன் அமைப்பினர், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 



அப்போது, 'குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதோடு, அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி அளிப்போம்' என்ற உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர்.‘ இதைத் தொடர்ந்து, குழந்தை தொழிலாளர்களாக பணியாற்றி மீட்கப்பட்டு, பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து, தற்போது கல்லூரி படிப்பை தொடர்ந்து வரும் மாணவ, மாணவிகளுக்குக் கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டன.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...