மீண்டும் ஒரு மொழிப்போர் வேண்டாம் என்ற எச்சரிக்கையால் மும்மொழி கல்வி கொள்கை விலக்கு : கோவையில் ஸ்டாலின் பேச்சு

கோவை : மீண்டும் ஒரு மொழி போர் போராட்டத்தை உருவாக்கி விடாதீர்கள் என்ற எச்சரிப்பின் காரணமாகவே மும்மொழி கல்வி கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கோவையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


கோவை : மீண்டும் ஒரு மொழி போர் போராட்டத்தை உருவாக்கி விடாதீர்கள் என்ற எச்சரிப்பின் காரணமாகவே மும்மொழி கல்வி கொள்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகக் கோவையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

கோவை திராவிட முன்னேற்றக் கழக மூத்த முன்னோடிகள் மு. ராமநாதன் மற்றும் கா.ரா. சுப்பையன் புகழ் அஞ்சலி நிகழ்ச்சி அவிநாசி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, இருவரது திருவுருவ படத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.



அப்போது, அவர் பேசியதாவது :- தி.மு.க. இயக்கத்தின் முன்னோடியாக, தியாகச்சுடராக விளங்கியவர் மு.ராமநாதன். அன்பிற்குரிய வழக்கறிஞராக இருந்தவர் க.ரா. சுப்பையன். கலைஞர் கோவை வரும் போது மட்டுமல்லாமல், நான் வரும் நேரத்திலும்கூட ஒவ்வொரு முறையும் தவறாமல் ரயில்நிலையமாக இருந்தாலும் சரி, விமான நிலையமாக இருந்தாலும் சரி அந்த இடங்களில் நின்று கழகத்தினருடன் என்னை வரவேற்று ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தவர் மு.ராமநாதன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு உடல்நலம் மோசமானது. அப்போது, நான் அவரைச் சென்று பார்ப்பதையும், நலம் விசாரிப்பதையும் வழக்கமாகக் கொண்டேன். தி.மு.க., நீதிக்கட்சி, மொழிப் பற்று போன்ற அனைத்தையும் கரைத்துக் குடித்து பல்கலைக்கழகம் போன்று திகழ்ந்தார். அந்த பல்கலை.,யில் படித்தவர்கள் தான் இங்கு அமர்ந்து இருக்கும் அனைவரும். 

தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு படிப்படியாக பல்வேறு நிர்வாகக் குழுவிலும் இடம்பெற்றவர். கோவையின் மாநகர் மாவட்ட செயலாளராக பணியாற்றி, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராகவும், கோவை தெற்கு பகுதியின் எம்.எல்.ஏ.வாக இருமுறை தேர்வு செய்யப்பட்டு தொகுதி மக்களுக்காக பாடுபட்டவராகவும் உள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யாக இருந்து மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சியை செய்த அவரை மறக்க முடியாது. 



இதேபோல, சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த க.ரா. சுப்பையன், தி.மு.க.வில் இணைந்து சட்டக் கல்லூரியில் தமிழ்மன்ற செயலாளராக பணியாற்றி, பேராசிரியர் மூலம் அண்ணாவிடம் அறிமுகமாகி, இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுத்தார். கலைஞர்தான் அவரது திருமணத்தை நடத்தி வைத்தவர். சிறு வயதில் கோவைக்கு வந்தபோது எல்லாம் என்னை நன்கு உபசரித்தவர் சுப்பையன். 

இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், மும்மொழி கல்வி திட்டம், புதிய கல்விக்கொள்கை வரைவுத் திட்டத்தை தயாரித்துள்ள செய்தி வந்து கொண்டு இருப்பதைப் பார்க்கிறோம். கடந்த கால தமிழக வரலாறு மற்றும் மாணவர்கள் நடத்திய போராட்டங்களை அவர்கள் பார்க்க தவறிவிட்டனர். மும்மொழி கல்வி திட்ட அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் தமிழக இளைஞர்கள் பொங்கி எழுந்ததை பார்த்தோம். மீண்டும் ஒரு மொழி போர் போராட்டத்திற்கு ஊக்குவிக்காதீர்கள் என்று கூறினேன். தற்போது அது நிறுத்தப்பட்டு உள்ளது. 1965-ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்கள் இந்த இருவரும். இந்த சூழலில் இரண்டு தலைவர்களின் படங்களை திறப்பது பொருத்தமாக இருக்கிறது.

திருமணமான மூன்றே நாளில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, சட்ட நகலை எரித்து கைது செய்யப்பட்டு 10 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டவர் ராமநாதன். தமிழகத்தின் நலனுக்காக 27 முறை சிறை சென்ற செம்மல். எத்தனை முறை சிறை சென்றாலும் கடைசி மூச்சுள்ள வரை கழகத்திற்காக கர்ஜித்தவர். கோவை - பெங்களூர் இண்டர்சிட்டி ரயிலை கொண்டு வந்தவர். கோவை - ஆத்துப்பாலம் சாலை விரிவாக்கம் செய்ய உதவியவர். நேரு விளையாட்டு மைதானம் அமையக் காரணமாக இருந்தவர். திருப்பூர், ஈரோடு சுற்றுப்புற சாலை அமைய காரணமாக இருந்தவர். அன்பகத்திற்கான நிதியை வசூலிக்க எனக்கு உதவியவர். இயக்கத்திற்கு வலுசேர்க்கப் பாடுபட்டவர் ராமநாதன்.

க.ரா.சுப்பையன் எம்.பி.,யாக இருந்த போது அவரது தொகுதி மேம்பாட்டுக்கு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாகப் பயன்படுத்தி பொது கழிப்பிடங்களைக் கட்டிக்கொடுத்தவர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பல சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர். மும்மொழி திட்டத்தை திணிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதற்கு நாம் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் தான் தற்போது தடுக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம். ஆனால், இதை பார்க்க கலைஞரும் இல்லை, அண்ணன் ராமநாதன், கா.ரா. சுப்பையனும் இல்லை. மறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில் அவர்களின் குடும்பத்திற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், என்றார். இதனைத்தொடர்ந்து, மறைந்த தலைவர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...