இறந்த குட்டியின் சடலத்தை தூக்கிக் கொண்டு இறுதி ஊர்வலம் சென்ற யானைகள் : கர்நாடகாவில் நெகிழச் செய்த சம்பவம்

கர்நாடகாவில் இறந்த குட்டி யானையின் சடலத்தைத் தூக்கிக் கொண்டு தாய் யானையுடன் சக யானைகளும் ஊர்வலமாகச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கர்நாடகாவில் இறந்த குட்டி யானையின் சடலத்தைத் தூக்கிக் கொண்டு தாய் யானையுடன் சக யானைகளும் ஊர்வலமாகச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 



கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வனத்துறை அலுவலர் பிரவீன் கஸ்வான் என்பவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தாய் யானை ஒன்று இறந்த தனது குட்டி யானையை சோகத்துடன் தூக்கிக் கொண்டு சாலையைக் கடக்கிறது. அதன்பின் மற்ற யானைகள் கூட்டமாக பின்தொடர்ந்து வந்தன. சாலையைக் கடக்கும் போது தாய் யானையை தூக்கி வந்த குட்டியின் சடலத்தை சாலையில் போட்டபடி சிறிது நேரம் நின்றது. 



பின்னர், பிற யானைகள், குட்டியைப் பிரிந்து வாடும் தாய் யானைக்கு ஆறுதல் கூறுவது போன்று அருகில் சென்று நின்றன. பின்னர், மீண்டும் குட்டியின் சடலத்தைத் தூக்கிக் கொண்ட தாய் யானை, மெதுவாக வனப்பகுதிக்குள் நுழைந்தது. அதனைத் தொடர்ந்து, பிற யானைகளும் சென்றன. இந்தக் காட்சிகள் பார்ப்போரை நெகிழச் செய்தது. 



மேலும், இந்த வீடியோவை பதிவிட்ட போது, "குட்டி யானை இறந்த சோகத்தில் இருக்கும் யானைகளின் இறுதி ஊர்வலம். குட்டியை பிரியும் தவிப்பை தாங்கிக் கொள்ள முடியாத நிலையில் இந்த யானை குடும்பம்," எனக் குறிப்பிட்டிருந்தார். அதோடு, சிம்பன்ஸி, கொரில்லா போன்ற உயிரினங்களைத் தவிர்த்து யானைகளும் இறுதி ஊர்வலம் சென்றது ஆச்சரியத்தை அளிப்பதாக அவர் பதிவிட்டிருந்தார். அவரது இந்த பதிவுகளுக்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...