மீண்டும் வாரந்தோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமை நடத்த கோவை மாநகராட்சி திட்டம்

கோவை : மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமை நடத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

கோவை : மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், வாரந்தோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமை நடத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அதற்கு தீர்வு காண பல்வேறு முயற்சிகளை கோவை மாநகராட்சி மேற்கொண்டும் எந்தவிதமான பலனும் அளிக்கவில்லை. இதனால், வாரந்தோறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமை நடத்த கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, குறை தீர்ப்பு வாகனம் மூலம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த கட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக கோவை மாநகராட்சி ஆணையர் ஜே. ஸ்ரவன் குமார் பேசுகையில், "வாராந்திர குறைதீர்ப்பு முகாமை மீண்டும் நடத்த திட்டமிட்டுள்ளோம். வரும் ஜுலை மாதம் முதல் வாரந்தோறும் திங்கட் கிழமைகளில் காலை முதல் மதியம் வரை மக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். இது தொடர்பான அறிவிப்பு இந்த வாரம் வெளியிடப்படும். மேலும், மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்கும் ஆப் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் அறிமுகம் செய்யப்படும். " என்றார். 

மக்கள் தங்களது குறைகள் அல்லது புகார்களை கீழ்க்காணும் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ, வாட்ஸ்அப் மூலமாகவோ, குறுஞ்செய்தி முலமாகவோ அளிக்கலாம்

தொலைபேசி : 0422 - 2390261 / 63 (பணிநேரம் 10.00 am - 5.45 pm)

வாட்ஸ்அப் எண் : 81900 00200 (புகைப்படங்களுடன்)

குறுஞ்செய்தி : 74404 22422

மின்னஞ்சல் முகவரி : [email protected]

வார்டு எண், பகுதி விபரம், புகைப்படம், பிரச்சனை மற்றும் நாள் ஆகியவை இந்த குறைகளை தெரிவிப்பவர்கள் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும். 

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...