கோவை : அரசு அனுமதி பெறாமல் இயக்கப்படும் ரேப்பிடோ இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை மாவட்டத்தில் தனிநபர் இருசக்கர வாகனங்களின் ரேப்பிடோ என்கிற செயலி மூலம் முன்பதிவு செய்து பொதுமக்களை ஏற்றிக் கொண்டு வாடகை வாகனமாக இயக்கப்படுகிறது என்ற புகார் எழுந்து வந்தது. இதன் அடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை சரகத்தின் இணைப் போக்குவரத்து ஆணையரின் உத்தரவின் பேரில் கோவை மாநகர வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையுடன் இணைந்து ரேஸ்கோர்ஸ் சாலை, ரயில்வே சந்திப்பு, மகளிர் பாலிடெக்னிக், காந்திபுரம் ஆகிய இடங்களில் நின்று, ரேப்பிடோ செயலி மூலம் பதிவு செய்து இருசக்கர வாகனங்கள் வந்தவுடன் பறிமுதல் செய்யப்பட்டன.
இதன்மூலம், 15 இருசக்கர வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவைகள் அனைத்தும் நீதிமன்றத்தில் உரிய அபராதத் தொகை வசூலித்த பின்பே வாகனங்கள் விடுவிக்கப்படும். இதற்கு முன்பாக, இருகட்டங்களில் சுமார் 62 வாகனங்கள் இதே குற்றத்திற்காக சிறைபிடிக்கப்பட்டு, உரிய அபராதத் தொகை நீதிமன்றத்தில் செலுத்திய ரசீதுடன் வந்த பின்பே விடுவிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், அரசு அனுமதி பெறாமல் இயக்கப்படும் இத்தகைய இருசக்கர வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய வேண்டாம், இவ்வாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.