கோவையில் சட்டவிரோதமாக சீட்டு விளையாண்ட 20 பேர் கைது : மாவட்ட காவல்துறையின் தொடர் நடவடிக்கைகளால் சமூக விரோதிகள் அச்சம்

கோவை : கோவையில் நேற்று மாலை சட்டவிரோதமாக சீட்டு விளையாண்ட 20 பேரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை : கோவையில் நேற்று மாலை சட்டவிரோதமாக சீட்டு விளையாண்ட 20 பேரை மாவட்ட காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் பெருகி வரும் குற்ற சம்பவங்களை கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் பல்வேறு முயற்சிகளை செயல்படுத்தி வருகிறார். இப்படி மாவட்டம் முழுவதும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் நடைபெறும் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை, 3 நம்பர் லாட்டரி விற்பனை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் தனிப்படை கொண்டு தடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள 16 சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்து வந்தவர்கள், காவல் நிலைய பிணையில் விடப்பட்டு வந்ததை ஒழித்து, குற்றத்தை தடுக்கிம் வகையில் சிறைப்படுத்த வழிவகை கையாளப்பட்டு வருகிறது. இப்படி இதுவரை கோவை மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், துடியலூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சீட்டு விளையாண்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று மாலை சிவாஜி காலனியில் உள்ள குடோனில் உள்ளே நுழைந்த போலீசார் சட்டவிரோதமாக சீட்டு விளையாண்ட 20 பேரை கைது செய்தனர். இதில், போலீசார் விமல் குமார், விஜயகுமார், விக்னேஷ், வைரவேல், கமல் குமார் உள்ளிட்ட 20 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 64,780 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி தினமும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து மாவட்ட காவல் துறை நடவடிக்கைகள் எடுத்து வருவது பொதுமக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றுள்ளது.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...