மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் காவிரி நதிநீர் துணை ஒழுங்காற்று குழுவினர் ஆய்வு

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் காவிரி நதிநீர் துனை ஒழுங்காற்று குழுவினர் தண்ணீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு நடத்தினர்.

கோவை : மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் காவிரி நதிநீர் துனை ஒழுங்காற்று குழுவினர் தண்ணீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு நடத்தினர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் காவிரி ஆற்றின் கிளை ஆறான பவானி ஆறு ஓடி வருகிறது. ஆண்டுதோறும் வற்றாமல் ஓடி வரும் இந்த ஆற்றுநீரினை ஆதாரமாகக் கொண்டு பல லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைவதுடன் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த நிலையில், அண்மையில் டெல்லியில் காவிரி ஆணையத்தின் கூட்டமானது நடைபெற்றது. இதில், காவிரி நதிநீரை பங்கிடும் மாநிலமான தமிழகம், கர்நாடகா,கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று பங்கீடு குறித்து உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து புகார் கூறினர். இதனையடுத்து, காவிரி ஒழுங்காற்று குழு தனது துணை குழு தலைமையில் சம்பந்தபட்ட மூன்று மாநிலங்களில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீர் வரத்து மற்றும் வெளியேற்றம் குறித்து அறிக்கை தயாரித்து அனுப்ப உத்தரவிட்டது. இதன்படி, சம்பந்தபட்ட நான்கு மாநிலங்களின் மத்திய நீர்வள அதிகாரிகள் கண்காணிப்பு துணை குழுவின் பொறியாளரான மோகன் முரளி தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு, காவிரி மற்றும் அதில் கலக்கும் துணை ஆறுகளின் தண்ணீர் வெளியேற்றம் குறித்து ஆய்வு நடத்தி வருகிறது. நேற்று காவிரி ஆறு ஓடும் பகுதிகளான கர்நாடகாவிலும் தமிழகத்தின் பிலிகுண்டு மற்றும் மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. 



இந்த நிலையில், இன்று மேட்டுப்பாளையம் வழியாக ஓடி காவிரியில் சங்கமிக்கும் பவானி ஆற்றில் காவிரி ஓழுங்காற்று துணை குழு நான்கு இடங்களில் ஆய்வு செய்தது. பவானி சாகர் அனையில் துவங்கி மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டி வரை ஆய்வு மேற்கொண்ட இந்த குழு, நீர்வரத்தினை ஆற்றில் இறங்கி பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த குழுவினர், “காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவின் பேரில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் தண்ணீர் வரத்து மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை இந்த குழு சென்னை மற்றும் பெங்களூரு பகுதியில் உள்ள அலுவலங்களில் இருந்தே தெரிந்துகொள்ளவதுடன், டிஜிட்டல் முறையில் கருவிகளை ஆறுகளில் பொறுத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டிருக்கிறோம். அவற்றின் விபரங்களை இணையதளத்தில் பதிவிடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இது குறித்து மூன்று மாநிலங்களை சேர்ந்த மத்திய நீர்வள அதிகாரிகளும் கூடி இந்த ஆய்வு நடத்திவரும் நிலையில், ஆய்வுக்கு பின் இது குறித்து விரைவில் மத்திய அரசிடம் அறிக்கை அளிக்கப்படும்,” என தெரிவித்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...