சூலூர் தொகுதி வாக்காளர்களுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் ஸ்டாலின்

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலங்கல் பகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கோவை : சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கலங்கல் பகுதியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று பொதுமக்களை நேரில் சந்தித்து வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் இன்று பிற்பகல் விமானம் மூலம் கோவை வந்தார். தனியார் ஓட்டலில் ஓய்வெடுத்த அவர், மாலையில் சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கலங்கல் கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனிக்கு சென்றார். அங்கு மதுரை வீரன் பட்டத்தரசியம்மன் கோவிலுக்கு சென்ற ஸ்டாலினுக்கு, அங்கிருந்த பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பின்னர், கோவில் முன்பாக அமர்ந்து பொதுமக்களிடம் பேசிய ஸ்டாலின், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, பொதுமக்கள் அவருடன் புகைபடம் எடுத்துக்கொண்டனர். 



இதனைத் தொடர்ந்து, கலங்கல் ஆலமரத்தின் அருகில் கூடி இருந்த பொதுமக்களுடன் மரத்தடியில் அமர்ந்து பேசிய பேசிய ஸ்டாலின் அவர்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியின் போது, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, பொங்கலூர் பழனிச்சாமி மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் ஆகியோர் உடன் இருந்தனர். சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்ற தி.மு.க. தலைவர் ஸ்டாலின் வாக்களித்த மக்களுக்கு 

நன்றி தெரிவிக்கிறார். இதனைத் தொடர்ந்து, திருப்பூரில் நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.



Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...