அரசு செயல்படுத்தும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் : கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

கோவை : அரசு செயல்படுத்தும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை : அரசு செயல்படுத்தும் வளர்ச்சித் திட்டப்பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என  கோவை  மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர், இருகூர் பேரூராட்சிகள், சூலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடிப்படை கட்டமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி இன்று நேரில் பார்வையிட்டு களஆய்வு மேற்கொண்டார். இவ்வாய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பசுபதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில்குமார், பேரூராட்சி செயல் அலுவலர்கள் திஜெகதீசன், திரு.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டத்தின் நகர்புற கிராமப்புற மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப உள்ளாட்சித் துறையின் மூலம் ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், குடிநீர் குழாய்கள்பொருத்துதல், மழைநீர் வடிகால் அமைத்தல், சாலைவசதிகள், தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



அதன்படி, இருகூர் பேரூராட்சியில் தமிழ்நாடு நகர்புறசாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தில் ராம்நகர் பகுதியில் ரூ. 1 கோடி மதிப்பீட்டில் சாலை அமைக்கப்பட்டு வரும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அப்பகுதியில் சுமார் 30,000 மக்கள் குடியிருந்து வரும் சூழ்நிலையில், அவர்களுக்கு 3 நாட்களுக்கு ஒருநாள் வழங்கப்பட்டு வரும் குடிநீர் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்கின்றதா என்பது தொடர்பாகவும் நேரடி கள ஆய்வு மேற்கொண்டார். அதுபோலவே, போதிய அளவிலான தெருவிளக்குகள் அமைக்கவும் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, இருகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், நோய்க்கான தடுப்பு பிரிவு, கண்டறிதல் மற்றும் சிகிச்சை பிரிவு, கருப்பை வாய் பரிசோதனை பிரிவு, புறநோயாளிகள் பிரிவு, ஸ்கேன் பிரிவு, ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், அங்கு சிகிச்சைக்காக வருபோர்களிடம், அங்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் தொடர்பாகவும், ஆரம்ப சுகாதாரநிலையத்திற்கு தேவையான வசதிகள் குறித்து மருத்துவரிடமும் கேட்டறிந்தார். அப்போது, சுற்றுப்புற தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாகவும், ஆரம்ப சுகாதார நிலையத்தின் தேவைப்படும் பகுதிகளில் போதிய அளவிலான மின்விசிறிகள் அமைக்கவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கு இயந்திரம் அமைக்கவும் பேரூராட்சிகள் உதவி இயக்குநருக்கு  மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி  உத்தரவிட்டார்.



அதனைத்தொடர்ந்து, சூலூரில் ரூ. 4 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் பேருந்து நிலைய கட்டுமான பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டபோது, பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்படும் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான கழிப்பறை வசதி, குடிநீர் வசதி, தாய்மார்கள் பாலுட்டு அறை, இருக்கை வசதிகள் போன்றவை முறையான அமையப்பெற்றிருக்கவேண்டும் எனவும், விரைந்து பணிகளை முடிக்கவும் கட்டிமுடிக்கப்பட்ட பின்னர் பேருந்து நிலையத்தின் போதிய இடம் இருக்கும் பகுதிகளில் மரக்கன்றுகளை நடவும் பேரூராட்சி பொறியாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். தொடர்ந்து, மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டததின் கீழ் ரூ. 1 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மண்புழு இயற்கை உரம் தயாரிக்கும் பணி தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, கணியூர் கிராமத்தில் சேலம் கொச்சின் சாலையிலிருந்து புதுப்பாளையம் வழியாக கணியூர் வரை ரூ. 1.55 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணியினையும், கணியூரில் ரூ. 1.52 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும்  மழை நீர் வடிகால் தடுப்பணை அமைக்கும் பணியினையும், மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, மக்களுக்காக அரசு செயல்படுத்தி வரும் அடிப்படை கட்டமைப்பு பணிகள் அனைத்தும் உரியமுறையில் மக்களுக்கு நலன்பயப்பவையாக சென்று சேர வேண்டும். மாவட்டம் முழுவதிலும் இதுபோன்ற களஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும். எனவே, வளர்ச்சித்திட்டப்பணிகளில் ஈடுபடும் அலுவலர்கள் அனைவரும், தங்களின் பணிகளின் தன்மையறிந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றிட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன், என்றார்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...