கோவையில் வரும் 15-ம் தேதி ‘உழவே தலை-30’ நிகழ்ச்சி

கோவை : இந்திய தொழில் வர்த்தக சபையின் சார்பில் நடத்தப்படும் உழவே தலை-30 நிகழ்ச்சி கோவையில் வரும் 15- ம் தேதி நடக்கிறது.


கோவை : இந்திய தொழில் வர்த்தக சபையின் சார்பில் நடத்தப்படும் உழவே தலை-30 நிகழ்ச்சி கோவையில் வரும் 15- ம் தேதி நடக்கிறது.

இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சேம்பர்ஸ் டவர்ஸில் இன்று நடைபெற்றது. இதில், கோவை இந்திய தொழில் வர்த்தக சபையின் தலைவர் லட்சுமிநாராயணசாமி பேசியதாவது :- அனைத்துவிதமான தொழிற்சாலைகளுக்கும் அடித்தளமே வேளாண்மை தான். இயற்கை விவசாயம் செய்ய விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். அவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்த விரும்பும் விவசாயிகளுக்கு கடந்த 3 ஆண்டுகளாக ‘உழவே தலை’யின் மூலம் இந்திய வர்த்தக சபை உதவி செய்து வருகிறது. இயற்கை விவசாயத்தின் மூலம் வெற்றி பெற்ற விவசாயிகளை பற்றி எடுத்துரைக்க களப்பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன, என்றார்.



தொடர்ந்து, இயற்கை விவசாயியும், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான என். மணிசங்கர் கூறுகையில், “ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் உடனடியாக விளைச்சலைக் கொடுக்கும். ஆனால், நீண்டகால இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செலவில் இலாபம் கிடைக்கும். இயற்கை விவசாய உணவுகள் குறைந்த விலையுடையது மட்டுமே. ஏனெனில், தயாரிப்பு செலவும் மிகக்குறைவானதே ஆகும். ரசாயான உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் விவசாயத்திற்கு எதிரானது என்பதால் தான், அரசு மானியம் வழங்குகிறது,” என்றார்.



ஆவாரம்பாளையத்தில் உள்ள கோ-இந்தியா கருத்தரங்கில் நடக்கும் இந்த உழவே தலை நிகழ்ச்சி பிரிவுகளாக நடத்தப்படுகிறது. இதில், சித்தா பயிற்றுவிப்பாளர் ஜி. சிவராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுற்றுச்சூழல் அறிவியல் ஆராய்ச்சி அறக்கட்டளையின் சுல்தான் இஸ்மாயில், நாகையைச் சேர்ந்த இயற்கை விவசாயி ரேவதி, வேளாண் துறையின் உதவி இயக்குநர் என். செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு இயற்கை விவசாயம் பற்றி விளக்குகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...