கருமத்தம்பட்டி அருகே விவசாய நிலத்தில் உயர்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து டவர் லைன் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்

கோவை : செம்மாண்டம் பாளையம், கருமத்தம்பட்டி பகுதிகளில் உயர் கோபுரம் அமைப்பதற்காக நில அளவைத் பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டவர் லைன் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை : செம்மாண்டம் பாளையம், கருமத்தம்பட்டி பகுதிகளில் உயர் கோபுரம் அமைப்பதற்காக நில அளவைத் பணி செய்ய எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டவர் லைன் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு மின்சாரம் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்காக திருப்பூர் மாவட்டம் புகளூர் அருகே துணை மின் நிலையம் அமைக்கப்பட்டது. உயர் மின் கோபுரங்கள் மூலம் மின்சாரத்தை விளைநிலங்கள் வழியாக கொண்டு வந்து மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட 13 மாவட்ட விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்கப்பட்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. உயர் மின் கோபுரங்கள் விளை நிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 13 மாவட்ட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். 



இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் காரணமாக நில அளவீட்டு பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது நில அளவீடு பணிகளை அவர்கள் நிறுவனம் மீண்டும் துவங்கியிருக்கிறது.

இன்று காலை கோவை மாவட்டம் சோமனூரை அடுத்த செம்மாண்டம் பாளையம், கருமத்தம்பட்டி ஆகிய பகுதிகளில் நில அளவீடு பணியை அதிகாரிகள் நடத்தினர். அதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் போலீசார் துணையுடன் நில அளவிற்கு பணியானது நடைபெற்று வருகிறது. விவசாயிகள் இந்த உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையிலும், விவசாயிகளின் எதிர்ப்பை பொருட்படுத்தாமல் பவர் கிரிட் அதிகாரிகள் காவல்துறையினருடன் துணையுடன் இந்த பணிகளை மேற்கொண்டு இருக்கிறார்கள். இதனிடையே, கருமத்தம்பட்டி பகுதியில் ஏ.ஆர்.சி பள்ளி அருகே நில அளவீடு பணி மேற்கொண்ட அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தங்கள் நிலத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, விவசாயிகளை குண்டுக்கட்டாக காவல்துறையினர் தூக்கிச் சென்று கைது செய்தனர்.



இதேபோல, செம்மாண்டம் பாளையம் கிராமத்தில் நில அளவீடு பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அங்குள்ள டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நில அளவீடு பணியை திரும்பப் பெறவில்லை எனில் மேலிருந்து குதித்து விடப் போவதாகவும் மிரட்டினர். இதனைத் தொடர்ந்து, டவரில் ஏறி போராட்டம் நடத்தும் விவசாயிகளை சமாதானப்படுத்த அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து, அந்தப் பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

விவசாயிகளை பொறுத்தவரை இந்த திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை எனவும், உயர்மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதற்கு பதிலாக, புதை வழித்தடமாக மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் எனவும், இதன் மூலம் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும், தங்களின் நிலத்தின் மதிப்பும் என்றும் குறையாது என்பதால் மாற்று திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...