நீலகிரி : நீலகிரியில் சீசன் முடிந்தும் கூட கடந்த 10 நாட்களில் சுமார் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம், உதகையில் நடப்பாண்டு கோடை சீசன், மே 1-ல் துவங்கி, மே 31ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த கோடை சீசனை அனுபவிக்க சுமார் 10 லட்சம் சுற்றுலா பயணிகள், தாவரவியல் பூங்காவுக்கு, தொட்டபெட்டா, சூட்டிங் மட்டம், லேஸ்ராக் டால்பினோஸ் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்துள்ளனர். இது கடந்தாண்டை விட நடப்பாண்டில் 56 ஆயிரம் பேர் கூடுதலாக தெரிகிறது. சீசன் முடிந்தும் கூட, தினமும் சராசரியாக 18 ஆயிரம் பேர் வரை இங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். அதன்படி, ஜூன் 1-ம் தேதி முதல் 10 நாட்களில் சுமார் 2 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

இங்கு தற்போது நிலவும் குளுகுளு காலநிலை மற்றும் சீசன் காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, சில சுற்றுலாப் பயணிகள் இந்த ஜூன் மாதத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.