டெல்லி : கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்து பேசினார்.
டெல்லி : கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சந்தித்து பேசினார்.
மத்திய உள்துறை அமைச்சராக பொறுப்பெற்ற அமித் ஷாவை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, கோவை விமான நிலைய விரிவாக்கம் குறித்தும் மற்றும் தமிழ்நாட்டில் நிறைவேற்றப்பட்ட வேண்டிய பல்வேறு துறைகளைச் சார்ந்த திட்டப்பணிகளை குறித்தும் கோரிக்கை மனு அளித்தார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்தும், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் விடுபட்ட பயனாளிகளை இணைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் பி. தங்கமணி உடனிருந்தார்.

இதனிடையே, டெல்லியில் மத்திய நீத்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் விநியோகத் திட்டங்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்டப்ப்பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.