கோவை : கோவை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினை வரவேற்க வந்த கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிக ஒலி எழுப்பியதால் பயணிகளுக்கு முகம் சுழிப்பு ஏற்பட்டது.
கோவை : கோவை விமான நிலையத்திற்கு வந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலினை வரவேற்க வந்த கட்சி தொண்டர்கள் விமான நிலையத்தில் அதிக ஒலி எழுப்பியதால் பயணிகளுக்கு முகம் சுழிப்பு ஏற்பட்டது.
கோவையில் நாளை அவினாசி சாலை, நவ இந்தியா பகுதியில் உள்ள மீனாட்சி ஹாலில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மு.இராமநாதன், க.ரா.சுப்பையன் ஆகியோரின் திருவுருவ படத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றவும், மாலை 5 மணிக்கு பொள்ளாச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற விமானம் மூலம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கோவை வந்தார். அவரை வரவேற்க கட்சியினர் ஏராளமானோர் விமான நிலையம் வந்திருந்தனர்.

கோவை விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டது. இதனை தொடர்ந்து, அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டார். அவரை வரவேற்க வந்த தொண்டர்கள் பலர் கார்களில் வந்திருந்தனர். அவரை பின் தொடர்ந்து காரில் ஒலி எழுப்பியபடி பின் தொடர்ந்தனர். இதனை அங்கிருந்தவர்கள் காதை பொத்தி கொண்டு முகம் சுழித்தபடி அங்கிருந்து வெளியேறினர். தலைவர்களை வரவேற்க வேண்டியது தான் அது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாது இருக்க வேண்டும் அல்லவா என முனுமுனுத்தபடியே சென்றனர்.