கோவை : உத்தரப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று விட்டு தமிழகம் திரும்பிக் கொண்டிருந்த கோவையைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை : உத்தரப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று விட்டு தமிழகம் திரும்பிக் கொண்டிருந்த கோவையைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த ஆண்டு வழக்கத்தைவிட வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக, வடமாநிலங்களில் வெயிலின் தாக்கத்தினால் பலர் பலியாகியுள்ளனர்.
இதில், ராஜஸ்தான், டெல்லி, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானா, சண்டீகர் போன்ற மாநிலங்களில் வெயிலின் தாக்கம் ஆனது அதிகமாகவே இருந்தது. இந்த வெயிலின் தாக்கத்தினால் வெப்பக்காற்று நாளும் பொதுமக்கள் சிரமமடைந்து வருகின்றனர். இந்த கடுமையான வெப்பத்தினால் குறிப்பிட்ட சில மாநில மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்திற்கு கோவையில் இருந்து சுற்றுலா சென்ற 4 பேர், தமிழகம் திரும்பிய போது வெயிலின் தாக்கத்தினால் பலியாகினர். பச்சையா (80), பாலகிருஷ்ணன் (67), தனலட்சுமி (74) சுப்பர் ஐயா (71) ஆகிய 4 பேரும், கேரளா எக்ஸ்பிரஸில் வாரணாசி, ஆக்ரா உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று விட்டு, தமிழகம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். நேற்று மாலை ஜான்சி என்ற பகுதியில் ரயில் வந்து கொண்டிருந்த போது, திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் கோவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.