கோவை : புல்வாமா தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்திற்கு ஜெயின் சமூகத்தின் சார்பாக ஒரே நாளில் வசூல் செய்த 3 கோடியே 2 இலட்சம் ரூபாய் நிதி உதவி அளிக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் அவந்திபோரா நெடுஞ்சாலையில் கடந்த பிப்.14-ம் தேதி சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். பாலிவுட் நடிகர்கள், விளையாட்டு வீரர்களும், வீரர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயின் சங்காத்தானா மற்றும் சர்வதேச ஜெயின் அமைப்பின் சார்பாக ஒரே நாளில் திட்டமிடப்பட்டு 3 கோடியே இரண்டு லட்சம் செய்யப்பட்டது. வசூல் செய்த நிதியை தமிழகத்தை சேர்ந்த 7 வீரர்களுக்கும், மேலும் கேரளா மாநிலம் வயநாட்டை சேர்ந்த வசந்தகுமாரின் மனைவி ஷீமாவிற்கு வழங்கப்பட்டது. முன்னதாக, ஜெயின் சமூக அமைப்பின் நிர்வாகிகள் கைலாஷ் ஜெயின், தினேஷ் கவாத், பவன் கோத்தாரி மற்றும் திலீப் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தாக்குதலில் பலியான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் நிர்வாகிகள், “புல்வாமா தாக்குதலில் பலியான அனைத்து வீரர்களின் குடும்பங்களுக்கு இந்த நிதியை பகிர்ந்து அளித்து வருகிறோம், என தெரிவித்தனர்.