இரவு நேரங்களில் கனரக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு தேநீர் வழங்கி அறிவுரை வழங்கும் கோவை மாவட்ட காவல்துறை

கோவை : கோவை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில், மாவட்ட காவல்துறையும், ஊர்க்காவல் படையினரும் இணைந்து கனரக வாகன ஓட்டிகளுக்கு அதிகாலை 2 மணி முதல் 4 மணிவரை தேநீரும், அறிவுரையும் வழங்கினர்.


கோவை : கோவை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏற்படும் விபத்துக்களை கட்டுப்படுத்தும் முயற்சியில், மாவட்ட காவல்துறையும், ஊர்க்காவல் படையினரும் இணைந்து கனரக வாகன ஓட்டிகளுக்கு அதிகாலை 2 மணி முதல் 4 மணிவரை தேநீரும், அறிவுரையும் வழங்கினர்.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதுவும் நள்ளிரவு 12 மணிக்கு மேல்தான் அதிக விபத்துக்கள் ஏற்படுகிறது. குறிப்பாக, லாரி ஓட்டுநர்கள், வெகு தூரத்தில் இருந்து பயணித்து வரும் பேருந்து ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு ஓட்டுநர்கள் தூக்க கலக்கத்தில் வாகனத்தை செலுத்தி விபத்துக்கு வழி வகுக்கின்றனர். இப்படி இரவு நேரங்களில் நடைபெறும் விபத்துக்களை கட்டுப்படுத்த இரவு நேரங்களில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு மதுபோதையில் வாகனம் ஓட்டுகின்றனரா எனவும் கண்காணிக்கப்பட்டு வந்தது.



இந்த நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமாரின் உத்தரவின் பேரில் ஒரு புது முயற்சியாக மாவட்ட காவல் துறையினரும், மாவட்ட ஊர்க்காவல் படையினரும் இணைந்து பொள்ளாச்சியில் உள்ள உஞ்சவேலம்பட்டி பகுதியைக் கடக்கும் கனரக வாகன ஓட்டுநர்களுக்கு அதிகாலை 2 மணி முதல் 4 மணிவரை தேநீர் அளித்தும் விபத்தில்லா சாலைகளை உருவாக்க தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டது. இடைவெளியில்லாமல் வாகனங்களை இயக்கி வரும் வாகன ஓட்டுநர்களுக்கு அறிவுரையுடன் தேநீர் வழங்கப்படுவது விபத்துக்களை தடுக்க வழிவகுக்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்வில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிவக்குமார், கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கட்ராமன், ஊர்க்காவல் படையின் பிரதேச தளபதி பாலாஜி ராஜூ மற்றும் துணை தளபதி வித்யா ஸ்ரீ என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...