கோவை : தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டிச் சலுகை வழங்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு தாரர்களுக்கு மாதாந்திர தவணை செலுத்த தவறியதற்கான அபராத வட்டி மற்றும் முதலாக்கத்தின் மீதான வட்டியினை முழுவதுமாகவும், நிலத்தின் இறுதி விலை வித்தியாசத்தின் மீதான வட்டியினை வருடத்திற்கு 5 மாதம் மட்டுமே கணக்கிட்டு தள்ளுபடி செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோவை மாவட்ட வீட்டு வசதி வாரியத் திட்டங்களில் தவணை முறையின் மூலம் மனை/வீடு/அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றவர்களில் ஏற்கனவே முழுத் தொகையும் செலுத்தியவர்கள் நீங்கலாக ஏனைய ஒதுக்கீடுதாரர்கள் மட்டும், தாங்கள் ஒதுக்கீடு பெற்ற கோவை வீட்டு வசதிப் பிரிவு அலுவலகத்தை அணுகி வட்டித் தள்ளுபடி போக மீதம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை ஒரே தவணையில் செலுத்தி விற்பனைப் பத்திரம் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும், இந்த சலுகையானது, 2020-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், ஒதுக்கீடுதாரர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார். மேலும், விபரங்களுக்கு 0422 - 2493359.