கோவை : கோவையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 1,47,750 மதிப்பில் விலையில்லா சக்கர நாற்காலிகளை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) உமாமகேஸ்வரி, சமூக பாதுகாப்பு திட்டம் தனி துணை ஆட்சியர் அமுதன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணியிடம் அளித்தனர். பொதுமக்களிடம் 349 மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தில் பயிலும் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஒரு சக்கர நாற்காலி ரூ. 5,910 வீதம் என மொத்தம் ரூ.1,47,750 மதிப்பிலான விலையில்லா சக்கர நாற்காலிகளையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியின் குழந்தைகளுக்குப் பள்ளியில் பயில்வதற்கு நோட்டு புத்தகங்களை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி வழங்கினர்.