கூடலூர் : வன விலங்குகளுக்கு தாது பொருட்கள் தேவையான அளவு கிடைக்கும் வகையில், வனத்துறை சார்பில் வனப்பகுதியில் குறிப்பிட்ட மண்பகுதிகளில் தாது உப்பு தூவும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம் வன விலங்குகளின் முக்கிய வாழ்விடமாகும். கோடை வறட்சி முடிந்து வனப்பகுதி பசுமைக்கு மாறியதை தொடர்ந்து, உணவு, குடிநீர் தேடி இடபெயர்ந்த வன விலங்குகள், மீண்டும் முதுமலைக்கு திரும்பியுள்ளன. அவைகளுக்கு தேவையான தாது பொருட்கள் கிடைக்கும் வகையில், வனத்துறையினர் தாது உப்பு கட்டிகளை (மினரல் சால்ட்) பவுடர் செய்து, ஈரமான மண்ணில் தூவும் பணியை துவங்கியுள்ளனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், "வன விலங்குகளுக்கு தேவையான தாது பொருட்கள் கிடைக்கும் வகையிலும், செரிமான ஏற்படுத்தும் தாது உப்பு கட்டிகளை உடைந்து, அதனை ஈரமான மண் பகுதிகளில் தூவி வருகிறோம். வனப்பகுதி முழுவதும் தேவையான இடங்களில் தாது உப்பு தூவப்படும்,' என்றனர்.