கோவை : குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும், தயா அமைப்பின் மூலம் குழந்தைகள் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருவதாக லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

கோவை பந்தயசாலை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் தயா என்ற குழந்தைகளுக்கான அமைதி அமைப்பு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அவ்வமைப்பின் தலைவரான லதா ரஜினிகாந்த் விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார். இதையடுத்து, செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

அப்போது, அவர் பேசியதாவது :- குழந்தைகளை காக்க குழந்தைகளுக்கான அமைதி அமைப்பை ஒவ்வொரு ஊராகக் கொண்டு செல்கிறோம். அவ்வமைப்பை தமிழ்நாட்டில் 33 மாவட்டங்களிலும் ஆரம்பிக்க உள்ளனர். தற்போது, கோவையில் துவங்குவதற்கான ஆலோசனை நடத்தினோம். ஆர்வம் உள்ளவர்கள், சமூக ஆர்வலர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றலாம். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. எல்லா விதமான இடங்களிலும் வயது பாகுபாடின்றி குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகிறது. குழந்தைகளைப் பாதுகாப்பது சமுதாய கடமை. குழந்தைகளைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு வர வேண்டும்.
இந்த காலத்தில் தனித்தனியாக குடும்பங்கள் இருப்பதும் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியாத நிலை உள்ளது. சமுதாயம் ஒன்றாக இணைந்தால் தான் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும். குழந்தைகளுக்கான பாதுகாப்பு என்பது சமூகத்தில் உள்ள அனைவருக்குமான பாதுகாப்பாக இருக்கும்.
பெரியவர்கள் உலகில் நடக்கும் பிரச்சனைகள், குழந்தைகள் உலகத்தில் திணிக்கப்படுகிறது. குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை 180012 08866 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், www.peaceforchildren.net என்ற இணையதளம் மூலமாகவும் தெரிவிக்கலாம். பல தரப்பினருடன் இணைந்து குழந்தைகள் பிரச்சனைகளை தீர்க்க முயன்று வருகிறது, என அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணன், சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன், ராம்ராஜ் காட்டன் நிர்வாக இயக்குனர் நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.