கோவை மாநகராட்சியில் 17 பகுதிகளில் கட்டிடக் கழிவு சேகரிப்பு மையம் அமைக்க முடிவு

கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 17 கட்டிடக் கழிவு சேகரிப்பு மையங்களை அமைக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.



கோவை : கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 17 கட்டிடக் கழிவு சேகரிப்பு மையங்களை அமைக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

கோவை மாநகராட்சியில் கட்டிடக் கழிவுகளை கையாளுவதில் பெரும் சிக்கலாக உள்ளது. இந்த நிலையில், மாநகரில் உள்ள 4 மண்டலங்களில் மொத்தம் 17 கட்டிடக் கழிவு சேகரிப்பு மையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தெற்கு, வடக்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் தலா 4 மையங்களும், கிழக்கு மண்டலத்தில் 5 மையங்களும் அமைக்கப்படவுள்ளது. 

இது தொடர்பாக கோவை மாநகராட்சியின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், "கட்டிடக் கழிவுகளை மேலாண்மை செய்வதில், தற்காலிக தீர்வு காண்பதற்காக கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. சேகரமாகும் கட்டிடக் கழிவுகள் மண்டல வாரியாக இந்த மையங்களில் சேகரிக்கப்படும். உக்கடம் பகுதியில் மீண்டும் கட்டிடக் கழிவு மேலாண்மை மற்றும் சுழற்சி மையத்தை அமைக்க கோவை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்த மையத்தை அமைப்பதற்கான நடவடிக்கை மாநகராட்சி நிர்வாகம் எடுத்துள்ளதால், இந்த ஆண்டுக்குள் கட்டிடக் கழிவு மேலாண்மை மையம் உருவாகும்," என்றார். 

நடப்பாண்டில் தூய்மை இந்தியா தரவரிசைப் பட்டியலில் 16-வது இடத்தில் இருந்து 40-வது இடத்திற்கு பின்தங்கியது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், உக்கடத்தில் கட்டிடக் கழிவு மேலாண்மை மற்றும் மறுசுழற்சி மையம் அமைக்காததே காரணமாகும்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...