கோவை : பீளமேடு இ2 காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் புதிதாக 40 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கோவை : பீளமேடு இ2 காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட குடியிருப்பு பகுதிகளில் புதிதாக 40 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
கோவை மாநகரில் நடைபெறும் போக்குவரத்து விதிமீறல், கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்களைக் கட்டுப்படுத்த கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வேண்டும் என்ற முயற்சியில் மாநகர காவல்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, காவல்துறையினர் குடியிருப்பு சங்கங்களின் உதவியுடன் மாநகரின் முக்கியப் பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி வருகின்றனர். இப்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எஸ். புரம் பகுதியில் அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

அதேபோல, மாநகர் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் முயற்சியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், இன்று பீளமேடு பகுதியில் உள்ள ஜெயவர்தனுபாலு நகர் குடியிருப்பில், குடியிருப்பு நலச் சங்கத்தின் உதவியுடன் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர்.
"குடியிருப்பு பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச்செயலில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கண்காணிப்பு கேமராக்கள் உதவியாக இருக்கும்," என காவல் ஆணையர் சுமித் சரண் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் உள்ளிட்ட பல அதிகாரிகளும், குடியிருப்பு வாசிகளும் கலந்து கொண்டனர்.